Wednesday, December 1, 2010

தேடப்படும் குற்றவாளி அமைச்சர் தேவாவுக்கு இராஜமரியாதை செய்யும் இந்திய அரசு!

”இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அவரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பாக வேறு எவரும் கருத்துக் கூற முடியாது” இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம்.

யாழ்ப்பாணத்தில் இன்று இந்தியாவின் துணைத் தூதரகம் திறந்து வைக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சம்பிரதாய ரீதியாக இத்துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார்.

இவ்வைபவத்துக்கு பேராளர்களாக இந்திய அரசால் அழைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் தேவானந்தா. இவர் யாழ்ப்பாணத்தில் எஸ்.எம். கிருஷ்ணா இன்று கலந்து கொண்ட அனைத்து வைபவங்களிலும் பகிரங்கமாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கைலாகு கூட கொடுத்திருக்கின்றார். தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான அமைச்சர் தேவானந்தா விடயத்தில் இந்திய அரசின் செயல்பாடு இரட்டை வேடத்தை புலப்படுத்தவில்லையா? உங்கள் கருத்து என்ன? உங்கள் அவதானம் என்ன? என்று வினவியபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் சொன்னவை வருமாறு:-

”இது ஒரு சிறிய விடயம். தேவானந்தா இந்திய அரசால் தேடப்படுபவர். எனவே அவரை எப்படி நடத்த வேண்டும்? என்பதை இந்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும். இது குறித்து வெளியாட்கள் வேறு எவரும் கருத்துக் கூற முடியாது.

துணைத் தூதரக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வர வேண்டும் என்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. எனவே எமது கட்சியினர் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment