Wednesday, December 1, 2010

What is GDP, Definition of GDP, Define GDP, What is Real GDP, What is GDP Growth

Definition of GDP

GDP (the measure of an economy adopted by the United States in 1991; the total market values of goods and services produced by workers and capital within a nation's borders during a given period (usually 1 year))

What is GDP?

GDP – or Gross Domestic Product – is a measure of the overall economic output within a country’s borders over a particular time, typically a year.

GDP is calculated by adding together the total value of annual output of all that country’s goods and services.

GDP can also be measured by income by considering the factors producing the output – the capital and labour – or by expenditure by government, individuals, and business on that output.



Real GDP is the gross domestic product adjusted for inflation
Nominal GDP is the gross domestic product without taking into account inflation.

What is the GDP growth rate?

The change in GDP from one year to the next (or from quarter to quarter) can be given as a percentage. This is called the GDP growth rate.

The real GDP growth rate is a much more useful measure of economic growth than the nominal rate.

If a country’s GDP is growing at a nominal rate of 5% but inflation is running at 4%, only 1% of the growth is down to improved economic output. The rest is just because prices of goods and services went up.
Why should we care about GDP?

The GDP shows how well a particular country is doing economically.

A recession, for instance, is defined as two quarters of negative GDP growth.

One drawback of GDP however is that it can only measure what the government has measured. Anything traded without the government knowing won’t be included in the GDP, which can be significant in some countries.

Also, it’s worth stressing GDP is a purely economic measure. A brutal dictatorship might whip a decent GDP growth rate out of its workforce, for instance, but it wouldn’t say much about the standard of living in that country!

Similarly, some environmentalists have argued that our obsession with growth has led to an over-exploitation of the Earth’s resources.
GDP as a formula

The GDP can be represented by the following formula:



GDP = C + G + I + NX
Where:


C = All private consumption
G = All government spending
I = Investment by businesses
NX = The country’s net exports (total exports – total imports)

To discover what is the GDP of particular countries, try the CIA World Factbook.

What is GDP, Definition of GDP, Define GDP, What is Real GDP, What is GDP Growth

ch4news_301110.wmv

உண்மையைக் கண்டு அஞ்சும் அமெரிக்கா

உலக அளவில் ஒவ்வொரு நாட்டின் தூதரங்களும் அந்தந்த நாடுகளில் உளவு வேலைகளில் ஈடுபட்டுத் தொகுத்த தகவல்களை தங்கள் நாடுகளுக்கு அனுப்பி வைத்த இரகசிய விவரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டதில் வேறு எந்த ஒரு நாட்டையும் விட மிகவும் ஆடிப்போயுள்ளது அமெரிக்காதான்.

சுறுக்கமான வாசகங்களாக அன்றாடம் அனுப்பப்பட்ட இரகசியத் தகவல்களை மிகுந்த சாமர்த்தியத்துடன் திரட்டி, அவைகளை பொது மக்களின் பார்வைக்கு கொண்டுவந்த விக்கிலீக்ஸ் இணையத்தளமும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்காவும் பாராட்டிற்குறியவர்கள் என்பதில் ஐயமேதுமில்லை.

தங்களை ஆளும் அரசுகள் ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அயல் நாடுகளில் எப்படிப்பட்ட ‘சாகசங்களில்’ ஈடுபடுகின்றன, அவைகளின் நோக்கம் நாட்டிற்கும், உலகிற்கும் பயனளிக்கக்கூடியதா? அல்லது தங்கள் நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய அடுத்த நாட்டில் குழப்பம் விளைவிப்பதா என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ள விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய தகவல்கள் போதுமானவையே.


FILEபல இலட்சக்கணக்கில் திரட்டி வைத்துள்ள இராஜதநிர பரிமாற்றத் தகவல்களில் ஒரு துளியை, அதில் 240ஐ மட்டும் கடந்த திங்கட்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அதற்கே கோவம் கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், விக்கிலீக்ஸ் இணையத் தளத்தை அந்நிய பயங்கரவாத அமைப்பாக (Foreign Terrorist Organization - FTO) அறிவித்து அதனை தடை செய்ய வேண்டும் என்றும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை கைது செய்ய வேண்டும் என்றும் உரத்து குரல் கொடுத்துள்ளனர்.

ஆக இவர்கள் வசதிக்கு ஆடவில்லை என்றால் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரையிட்டு தடை செய்வார்கள் என்பது இந்தக் கூக்குரல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அது மட்டுமல்ல, விக்கிலீக்ஸ் மீது விவரங்களைத் திருடியதாக வழக்கு தொடரவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக செய்தி! என்ன வினோதம்! உலகம் முழுவதும் தங்களது ‘அபார’ திறன் கொண்ட உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வைக் கொண்டு ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கி, அந்நாடுகளின் பாதுகாப்பு இரகசியங்கள் மட்டுமின்றி, அந்நாட்டு்த் தலைவர்களின் பலவீனங்களைக் கூட ஆதாரப்பூர்வமாக திரட்டி வைத்துக்கொண்டு, அவைகளையும் சமயத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி, பல நாடுகளில் “அரசியல் புரட்சி’களையும், ‘ஆட்சி மாற்ற’ங்களையும் ஏற்படுத்திய அமெரிக்கா, அதே வேலையை உலக மக்களின் அறிதலிற்காக ஒரு அமைப்பு செய்யும்போது அதனை திருடு என்கிறது!

எந்தவித ஆதாரமும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்த நிலையிலும், ‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளது’ என்று கூறிக்கொண்டு 2003ஆம் ஆண்டில் அந்நாட்டிற்குள் படையெடுத்து, அந்நாட்டைச் சூறையாடி, அங்கு ஒரு புடலங்காயும் இல்லை என்பது உலகத்திற்கு தெரியவந்ததும், ‘நாங்கள் படையெடுத்தது ஈராக்கில் ஜனநாயக அரசை ஏற்படுத்தவே’ என்று பூசி மெழுகிய அமெரிக்கா. அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேன் மட்டுமின்றி, 11 இலட்சம் ஈராக்கியர்களைக் கொன்றுவிட்டு, அதைப்போல் மேலும் இரண்டு மடங்கு பிள்ளைகளை அனாதைகளாக்கிவிட்டு, அங்குள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்றி தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாம ஏமாற்றத்துடன், இன்றைக்கு வெளியேறுகிறோம் என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, அதன் இரகசியங்கள் வெளியாவதில் சங்கடங்கள் இருக்கத்தானே செய்யும்?

தங்களிடமுள்ள இரகசிய விவரங்களை வெளியிடப்போகிறோம் என்று முன்னறிவிப்பு செய்த பின்னரே விக்கிலீக்ஸ் கடந்த திங்கட்கிழமை இராஜதந்திர ரீதியில் பரிமாறிக் கொள்ளப்பட்ட 240 தகவல்களை வெளியிட்டது. அதற்கு முன்னரே அலறத் தொடங்கியது அமெரிக்கா. விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் விவரங்கள் இந்தியாவுடனான உறவைப் பாதிக்கும் என்று கூறியது. அதனை இந்திய அரசிற்கும் வெளிப்படையாகத் தெரிவித்தது.

இங்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியா ஆவதற்கு (வீட்டோ அதிகாரமற்ற நிரந்தர உறுப்பினராக) ஆதரவு அளிப்போம் என்று பேசியபோது அனைவரும் ஐந்து நிமிடத்திற்கு கைகளைத் தட்டினர். ஆனால், விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரிமாற்ற விவரங்களில், “ஐ.நா.பாதுகாப்புப் பேரவை உறுப்பினராவதில் தனக்கே முதல் தகுதி இருப்பதாக இந்தியா நினைத்துக்கொண்டிருக்கிறது” என்று ஏகடியம் செய்துள்ள விவரம் வெளியாகியுள்ளது. இந்த ஏகடியம் வெளியான 24 மணி நேரத்தில், உலக விவகாரங்களில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பு இருப்பதாக பீற்றுகிறது அமெரிக்கா. இங்குள்ள அரசு, இதெல்லாம் ஒரு பெரிய விடயமா? என்பதுபோல் ‘நாங்கள் கருத்து எதையும் சொல்ல மாட்டோம்’ என்கிறது, வெட்கக்கேடு!

அந்நிய நாட்டுத் தலைவர்களின் கிரெடிட் கார்ட்டில் இருந்து அவர்களின் பயண விவரங்கள் வரை அனைத்தையும் உளவறிந்து கூறுமாறு தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா பணித்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்துவதற்கு பாலஸ்தீன அரசின் தலைவர் மெஹம்மது அப்பாஸ், எகிப்து அரசு ஆகியவற்றின் ஒப்புதலை பெற்றதையும், காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிக் குழுவை ஒழித்துக்கட்டியப் பிறகு அப்பகுதியை பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிற்கு விட்டுவிடுவதாக இஸ்ரேல் அரசு ‘டீல்’ பேசிய அபார விவரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

ஒரு பக்கத்தில் ஈரான் உருவாக்கி வைத்திருக்கும் அணு ஆயுத தொழில் நுட்பம் மிகச் சாதாரணமானது என்கிற விவரத்தை அமெரிக்க அரசு அறிந்திருப்பதையும், அப்படிப்பட்ட நிலையிலும், ஈராக்கின் அணு மையங்களின் மீது தாக்குதல் நடத்துமாறு செளதி அரேபியா அமெரிக்காவை வற்புறுத்தியதையும் வெளியிட்டு அசத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.


FILEபாகிஸ்தான் அதன் பாதுகாப்புத் தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்பதையும், அணு ஆயுதங்களை தயாரிக்க அது உருவாக்கும் யுரேனிய வெடிப் பொருள் அங்குள்ள இஸ்லாமிய தீவிரவாத (பயங்கரவாதிகள் என்ற சொல்லை இங்கு பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும்) குழுக்களின் கைகளுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளதாகவும், அதைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட இரகசிய முயற்சி தோற்றதையும் வெளியிட்டு, அமெரிக்காவின் கையாலாகாத்தனத்தை புரிந்துகொள்ள உதவியுள்ளது விக்கிலீக்ஸ்.

பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தில் 1,20,000 முதல் 1,30,000 பேர் வரை பணியாற்றி வருவதாகவும், அவர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே பணியாற்றுபவர்கள் என்று 100 விழுக்காடு உறுதியளிக்க முடியாது என்ற விவரத்தை ரஷ்யாவின் அயலுறவு அமைச்சகத்தின் யூரி கோரோலீவ் கூறியதை வெளிக்கொணர்ந்துள்ளது விக்கிலீக்ஸ். இதற்காக இந்தியா பாராட்ட வேண்டாமா?

ஏமன் நாட்டில் அல் கய்டா அமைப்பிற்கு எதிராக அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே கூறியது பொய் என்பதையும், அது அமெரிக்கப் படைகள் நேரடியாக நடத்திய தாக்குதலே என்பதையும் (ஆனால் போட்ட குண்டுகள் நம்முடையது என்றார் அலி அப்துல்லா) விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

பயங்கரவாதம் அல்ல அணு ஆயுத குவிப்பே உலகிற்கு முதன்மையான பெரும் அச்சுறுத்தல் என்று அமெரிக்க, இங்கிலாந்து இராஜதந்திரிகள் அச்சம் தெரிவித்து அனுப்பிய தகவல்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது விக்கிலீக்ஸ்.

தங்கள் ஆட்சி நிர்வாக தோல்வியை மறைக்கவும், வீழ்ச்சியை நோக்கி சரிந்துக்கொண்டிருக்கும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வேறொரு நாட்டிலுள்ள வளங்களைக் கைப்பற்றவே, பயங்கரவாதம், தீவிரவாதம், பேரழிவு ஆயுதங்கள் என்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் அச்சுறுத்தல் கதைகளைக் கட்டி மக்களை நம்பச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெற்று போர் தொடுக்க, இவர்கள் கையாண்ட வழிமுறைகள் எப்படிப்பட்டவை என்பதை விக்கிலீக்ஸ் வெளியிடப்போகும் அடுத்த கட்ட தகவல்கள் உலகிற்கு உணர்த்துவதைத் தடுக்கவே அந்த இணையத் தளத்தின் மீது வழக்கும், அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கா மீது ‘இரண்டு பெண்களை கற்பழித்தார்’ என்று குற்ற வழக்கை போட்டு உள்ளே தள்ளவும் அமெரிக்கா சதி செய்து வருகிறது.

உலகின் சக்தி வாய்ந்த ஜனநாயக நாடு என்று தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு, அதன் மற்றொரு முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் உள்ளதல்லவா?

தேடப்படும் குற்றவாளி அமைச்சர் தேவாவுக்கு இராஜமரியாதை செய்யும் இந்திய அரசு!

”இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

அவரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும். அது தொடர்பாக வேறு எவரும் கருத்துக் கூற முடியாது” இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம்.

யாழ்ப்பாணத்தில் இன்று இந்தியாவின் துணைத் தூதரகம் திறந்து வைக்கப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சம்பிரதாய ரீதியாக இத்துணைத் தூதரகத்தை திறந்து வைத்தார்.

இவ்வைபவத்துக்கு பேராளர்களாக இந்திய அரசால் அழைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் தேவானந்தா. இவர் யாழ்ப்பாணத்தில் எஸ்.எம். கிருஷ்ணா இன்று கலந்து கொண்ட அனைத்து வைபவங்களிலும் பகிரங்கமாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கைலாகு கூட கொடுத்திருக்கின்றார். தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான அமைச்சர் தேவானந்தா விடயத்தில் இந்திய அரசின் செயல்பாடு இரட்டை வேடத்தை புலப்படுத்தவில்லையா? உங்கள் கருத்து என்ன? உங்கள் அவதானம் என்ன? என்று வினவியபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் சொன்னவை வருமாறு:-

”இது ஒரு சிறிய விடயம். தேவானந்தா இந்திய அரசால் தேடப்படுபவர். எனவே அவரை எப்படி நடத்த வேண்டும்? என்பதை இந்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும். இது குறித்து வெளியாட்கள் வேறு எவரும் கருத்துக் கூற முடியாது.

துணைத் தூதரக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வர வேண்டும் என்று தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. எனவே எமது கட்சியினர் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பாலியல் பலாத்காரம்: சிங்கள இராணுவத்தின் கொடூரம் மீண்டும் அம்பலம்

கடந்தவருடம் சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது புரிந்த அட்டூழியங்கள், சித்ரவதைகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் சேனல் 4 தொலைக்காட்சி, மீண்டும் ஒரு காணொளியை ஒளிபரப்பியுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று லண்டனுக்கு வருகை தந்த நிலையில், நாளை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் சேனல் 4 தொலைக்காட்சி, நேற்றும் ஒரு போர்க்குற்ற வீடியோ பதிவை வெளியிட்டது.

மகிந்தவின் லண்டன் பயணத்தை எதிர்த்து குளிர்காலநிலையையும் பொருட்படுத்தாமல் விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தியும் , அந்த எதிர்ப்புக்களை கருத்தில்கொள்ளாமல் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை அனுமதித்தது பிரிட்டன் அரசாங்கம்.

ஆனால் நேற்றைய சேனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கள இராணுவத்தினரின் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்த காட்சிகள் ராஜபக்சவுக்கு அதிர்ச்சியையும், பிரிட்டன் அரசாங்கத்திற்கும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காந்தியின் அச்சம் நனவாகிறது!

சட்டீஸ்கர் மாநிலத்தில், தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் 4 இலட்சம் பேர் துரத்தப்பட்டதையும், அவர்களின் துயரத்தையும் நமது நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கும் எடுத்த சொல்ல சென்னைக்கு வந்த காந்தியவாதி ஹிமான்சு குமார் ஒரு வரலாற்றைக் கூறினார்.


FILEஇந்தியா விடுதலை பெற்ற நாடான பிறகு, ஒரு நாள் மகாத்மா காந்தியைச் சந்திக்க வந்தாராம் பூதான இயக்கத்தை நடத்திய வினோபா பாவே. அவரிடம் பேசிய மகாத்மா காந்தி, “நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது. அரும்பாடுபட்டு நாம் பெற்ற இந்த விடுதலை நிலைக்க வேண்டுமானால் நமது மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அந்தப் பணியை நீங்களெல்லாம் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாம் நினைக்கும் அந்த உண்மையான ஜனநாயகம் இருக்காது. ஒன்று, பெரு நிறுவனங்களின் ஜனநாயகம் (Corporate Democracy) உருவாகும் அல்லது குண்டர்களின் ஜனநாயகம் (Goondas Democracy) இருக்கும்” என்று கூறியதாக ஹிமான்சு குமார் கூறினார்.

“மகாத்மா காந்தி அவ்வாறு கூறியதற்கு இணங்கவே, வினோபா பாவே வழியில் நின்று, தண்டகாரண்ய காடுகளில் எனது ஆசிரமத்தை அமைத்து அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கிடையே தொண்டு செய்து வருகின்றேன்” என்று கூறினார் (தமிழ்.வெப்துனியாவில் அந்த செய்தியைப் பார்க்க).

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் பயன்பெற்றோர் விவரங்கள், நீரா ராடியா நடத்திய உரையாடல்களில் வெளியானதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தியின் அந்த அச்சமே நினைவிற்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.இராசாவிற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தருவதில் இருந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை நடந்தேறிய பேரங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி, இந்த நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதிலும், மாற்றுவதிலும் பெரு நிறுவனங்கள் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அவைகளுக்கு வசதியாக பத்திரிக்கைகளில் செய்திகள் வராமல் இருட்டடிப்பை செய்யப்பட்டதும், அந்த பெரு நிறுவனங்கள் பெரும் பலம் அடைவதற்கென்ற அரசு அளிக்கம் சலுகைகளை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் பேசாமல் தடுக்க கையாண்ட முறைகளும் ராடியா உரையாடல் பதிவுகளில் வெளிவந்துள்ளது.


FILEஇந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குடும்பத்தில் நடந்த மோதல், அதில் ஒருவரின் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அவர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக பத்திரிக்கைகளை பயன்படுத்த முயன்றது. அதனை முன்னவர் ராடியா உள்ளிட்ட தனது லாபியிஸ்ட்டுகளை பயன்படுத்தி, ‘பேச்சுவார்த்தைகளை’ நடத்தி இருட்டிப்பு செய்த விவரங்கள். விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, திரைமறைவில் இத்தனை திரைமறைவு வேலைகள் நடந்துள்ளது.

இதைவிட, பெரும் அதிர்ச்சி தரும் மற்றொரு திரைமறைவு பேரம்தான் மிகக் கொடியது. மத்திய அரசு கடைபிடித்துவரும் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடர்பான உரிமம் (New Exploration and Licensing Policy) அளிக்கப்பட்டதில், இந்தியாவின் முதன்மையான அந்த பெரும் நிறுவனத்திற்கு வரிச் சலுகை - அதுவும் முன்தேதியிட்டு வழங்க - முன்வந்ததும், அதனை நாடாளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்து ‘கெடுத்து’விடாமல் இருக்க மேற்கொண்ண்ட திரைமறைவு நடவடிக்கைகளும்தான் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வரிச் சலுகை முன் தேதியிட்டு (Retrospective) அளிக்கப்பட்டால் அந்த முதன்மை நிறுவனத்திற்கு மட்டும் ரூ.81,000 கோடி வருமான வரிச் சலுகை கிடைக்குமாம். இந்த உண்மை பத்திரிக்கைகளில் வெளிவராமல் செய்துவிட்டதாக அந்த முதன்மை நிறுவனத்திற்கான தொடர்பாளராக செயல்பட்ட, இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அவருக்கு செயலராக இருந்த என்.கே.சிங், ராடியாவிடம் கூறுகிறார்.

அந்த உரையாடலில் ராடியாவுடன் பேசியது என்.கே.சிங்தான் என்பதை, அவருடன் கல்லூரியில் பயின்ற

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஷோரி (ஒரு தொலைக்காட்சி பேட்டியில்) உறுதி செய்துள்ளார். பத்திரிக்கைளில் வெளிவராமல் (இந்தியாவின் ஒரு பெரும் ஆங்கில நாளிதழின் உரிமையாளரிடமே பேசிவிட்டதாக கூறுகின்றனர்) தடுத்துவிட்ட பிறகு, அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை எவ்வாறு தடுப்பது என்று என்.கே.சிங், ராடியாவுடன் விவாதிக்கிறார்.


PIBஇப்பிரச்சனையை அருண் ஷோரி கட்சிக் கூட்டத்தில் எழுப்பியதால், அவர் நாடாளுமன்றத்திலும் அது பற்றி பேசக் கூடும் என்பதால், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலில் பேசுபவராக இருந்த அருண் ஷோரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அக்கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடுவை (திரைமறைவு வேலை செய்து) முதன்மை பேச்சாளராக வாதத்தை வைப்பார் என்று மாற்றுகின்றனர்.

இதேபோல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியை மக்களவையில் முதன்மை பேச்சாளராக விவாதத்தை தொடங்க வைத்து அந்த முதன்மை நிறுவனத்திற்கு அரசு அளிக்க உத்தேசித்துள்ள சலுகையை கேள்விக்கு உட்படுத்தாமல் தடுத்து விடுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று பெருமைப்படுத்தப்படும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாடாளுமன்றம் திரைமறைவு வேலைகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மை இன்றுதான் முதல் முறையாக - மிக ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!

இந்தியாவின் முதன்மையான நாளேடுகளில் இன்று வெளியாகியுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் உண்மையென்பதும், அது இதுவரை மறுக்கப்படவில்லை என்பதும் ஒன்றை நிச்சயமாக்குகிறது. அது இந்த நாடு நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மக்கள் ஜனநாயக அரசல்ல என்பதையே.

இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசு நிர்வாகிகள் (Bureaucracy), பெரு நிறுவனங்கள் (Corporates) ஆகியோரின் கூட்டணி ஜனநாயமே இங்கு நிலவுகிறது. இங்கு பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே அரசியல் கட்சிகளும், ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர் என்பதற்கு இதற்கு மேல் எந்தச் சான்றும் தேவையில்லை.

இவையாவும் ஒரிரு கோடி ரூபாய்க்கு நடந்த திரைமறைவு வேலையில்லை, பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தை சலுகை என்ற பெயரால் அரசே கொள்ளை கொடுக்கும் கொடுமையாகும்.

ஒரு பக்கத்தில் நமது நாட்டின் விவசாயிகள் கடன் தொலை தாங்காமல், மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டு சாகிறார்கள். இருபது ஆண்டுக்காலத்தில் இப்படி 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துள்ளார்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்த வந்த பூமியில் உள்ள வளங்களுக்காக பழங்குடிகள் - இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக - விரட்டப்படுகிறார்கள்.

கடலிற்குச் சென்று மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை கரையேற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் அல்லுறுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் வளத்தையும், வரிப்பணத்தையும் மிக எளிதாக பெற்று பெரு நிறுவனங்கள் செழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் அதிகம் இடம்பெறுகின்றனர் என்று இங்குள்ள பத்திரிக்கைகள் பல பெருமையாக செய்திகளை வெளியிடுகின்றன.

Thursday, October 21, 2010

இது என்ன ராஜநீதியோ...? புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்து தினமணி ஆவேசம்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் அதிக இடமிருக்கிறது என்றும் தோன்றுகிறது. மீண்டும் ஆயுதப் போராட்டமாக அமைவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

தற்போதும்கூட, சர்வதேச அளவில், மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக ஆயுதம் வாங்கியதற்கான வழக்குகளை எடுத்துக் கொண்டாலும் அவை யாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்பாகத்தான் இருக்குமேயொழிய, அதன் பிறகு அல்ல.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்திய அரசு தானாகவே விலக்கிக் கொண்டிருந்தாலும்கூட அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் 3 அமர்வுகளிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதும், நீதிபதியோ இந்த எதிர்தரப்பு கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்தான் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக இருக்கும் வரையில், இங்கே விடுதலைப் புலிகள் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைபவரை இந்திய அரசு கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதுதான் சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, விடுதலைப் புலிகள் எப்படி இங்கே இந்த நடுவர் மன்றத்தின் முன்பாக ஆஜராகி, தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்?

அவ்வாறு நடுவர் மன்றத்தின் முன்பு அவர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் விதிமுறையாக இருக்குமானால், அப்படியாக கருத்துத் தெரிவிக்க வரும் விடுதலைப் புலிகள் யாரும் கைது செய்யப்படாமல், அவர்கள் தாங்கள் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கினால்தானே அவர்கள் கருத்துத் தெரிவிக்க வருவார்கள்?

ஊட்டியில் நடைபெற்ற இந்த நடுவர் மன்றத்தின் 3வது அமர்வில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளார்.

இதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் இரண்டு: முதலாவதாக 2008-க்குப் பிறகு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சிலர் பிரச்னைகளை எழுப்புகின்றனர். இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இரண்டாவதாக, நாடுகடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக 115 பேரில் பலருக்கு விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. இந்தியாவில் இவர்களில் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனித்தாக வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இல்லை. இரண்டாவதாக, நடந்து முடிந்திருக்கும் ஈழப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைத்தான் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு முந்தைய சூழலை கவனத்தில் கொள்வது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது.

ஆனால் இதை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் முன்வைக்கும்போது, இதற்கு மறுப்புத் தெரிவிக்கவும், இந்தக் கருத்தில் மாற்றுக்கருத்து இருப்பதையும் சொல்ல வேண்டியவர்கள் இங்குள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே. அவர்கள் குரலுக்குத்தான் மத்திய அரசின் காதுகளைச் சென்றடையும் வலிமை இருக்கிறது. ஆனால் அவர்களோ, தங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பே இல்லாததுபோல மௌனம் சாதிக்கின்றனர். அவர்களுடைய தமிழ் இனப்பற்று அத்தகையது.

மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்துச் சிறை சென்றவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், ஆதரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற நிலையில், இவர்தம் கருத்துகளை ஏன் விடுதலைப் புலிகளின் கருத்தாகப் பதிவு செய்யக்கூடாது?

விடுதலைப் புலிகள் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தாலும், அவை பழைய தொடர்புகளின் எச்சமாக இருக்குமே தவிர, புதிய தொடர்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் இலங்கையில் நிலவும் இன்றைய சூழல் உணர்த்துகிறது.

ஒன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கி அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் சார்பில் வாதிட அவர்களது ஆதரவாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அது என்ன நடுவர் மன்றம்? ஏன் இந்த அமர்வுகள்?

இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டாலும்கூட, இந்தியா மறக்காது என்றால், ராஜபக்ச நீதியைக்கூடப் புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது, இந்திய அரசின் இந்த ராஜநீதியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

Wednesday, October 20, 2010

ம‌க்களை வதை‌க்கிறதா இலவச ‌வீடு திட்டம்?

''தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக்கூடாது என்பதற்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் ஒரு அற்புதமான திட்டம்தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளை கட்டி முடிக்கவேண்டும் என்று அறிவித்து, முதல் ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தோம். முதல் கட்டமாக இந்த 3 லட்சம் வீடுகளும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறந்துவைக்கப்பட இருக்கிறது'' எ‌ன்று செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த ‌நி‌க‌ழ்‌ச்‌சி‌யி‌ல் துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌வ்வாறு பே‌சியு‌ள்ளா‌ர்.

கலைஞ‌ர் ‌வீடு வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் முத‌ல் ‌‌வீ‌ட்டை கட‌ந்த 10ஆ‌ம் தே‌தி கடலூ‌‌ரி‌ல் பயனா‌ளி ஒருவரு‌க்கு வழ‌ங்‌கி தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். இ‌ந்த கலைஞ‌ர் ‌வீடு வழ‌ங்கு‌‌ம் ‌தி‌ட்ட‌த்தா‌‌ல் பொதும‌க்களு‌க்கு எ‌ன்ன பய‌ன் எ‌ன்பதுதா‌ன் கே‌ள்‌வி.

இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌வீடு க‌ட்ட த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் 75 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வழ‌ங்க‌ப்படு‌ம். எ‌ப்படி அ‌ந்த‌ப் பண‌ம் வழ‌ங்க‌ப்படு‌கிறது எ‌ன்றா‌‌ல், ‌முத‌லி‌ல் ‌வீ‌‌ட்டி‌ற்கு அ‌ஸ்‌‌திவார‌ம் போட 6 ஆ‌யிர‌‌ம் கொடு‌க்க‌ப்படு‌கிறது. எ‌ப்போது எ‌ன்றா‌‌ல், மு‌ன்பண‌ம் 6 ஆ‌‌யி‌ர‌ம் ரூபா‌ய் போ‌ட்டு அ‌ஸ்‌திவார‌ம் போட வே‌‌ண்டு‌மா‌ம். ‌பி‌ன்ன‌ர் அத‌ற்கு‌ரிய ‌‌பி‌ல்லை கா‌ட்டி 6 ஆ‌யிர‌ம் பண‌த்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இதை‌த் தொட‌ர்‌ந்து 56 ‌கிலோ க‌ம்‌பி, 56 ‌கிலோ ‌சிமெ‌ண்‌ட் மூ‌ட்டை வா‌ங்க அரசு அனும‌தி அ‌ளி‌‌‌க்‌கிறது. இதனை அனை‌த்தையு‌ம் வா‌ங்‌கி ‌வீடு க‌‌ட்டு‌ம் அ‌ந்த பயனா‌ளி‌, ‌பி‌‌ல் கா‌ட்டி அத‌ற்கு‌ண்டான பண‌த்தை பெ‌ற்று‌க் கொ‌ள்‌கிறா‌ர். இதையடு‌த்து ஜ‌ன்ன‌ல், கதவு வா‌ங்‌க 12 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் கொடு‌க்க‌ப்படு‌கிறது. அதுவு‌ம் மு‌ன்பண‌ம் போ‌‌‌ட்டு கதவு, ஜ‌ன்ன‌ல் வை‌த்து பில் கா‌ட்டிய‌பிறகே 12 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் கொடு‌க்க‌ப்ப‌டு‌கிறது.

இ‌ப்படி மு‌ன்பண‌ம் போ‌‌ட்டு ‌வீடு க‌ட்‌டு‌ம் அள‌வி‌ல் ஏழை ம‌க்க‌ள் இ‌ல்லை. இ‌ப்படி மு‌ன்பண‌ம் போ‌ட்டு ‌வீடு க‌ட்‌டு‌ம் ‌நிலை இரு‌ந்தா‌ல் ஏ‌ன் கலைஞ‌ர் ‌வீ‌டு வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ஏழை ம‌க்க‌ள் ‌வீடு க‌ட்ட ‌நினை‌ப்பா‌ர்க‌ள்.

நட‌ந்த ‌நிக‌ழ்வு ஒ‌‌ன்றை ந‌ம் வாசக‌ர்களு‌க்கு சொ‌ல்ல ‌விரு‌ம்பு‌கிறா‌ம். தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌‌ம் ‌வீரபா‌ண்டியப‌ட்டிண‌ம் ம‌ண்டல‌த்‌தி‌ல் கலைஞ‌ர் ‌வீடு வழ‌ங்கு‌ம் ‌‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 190 ‌வீடுக‌ள் க‌ட்ட முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌த்தனை நா‌ள் குடிசை‌யி‌ல் வா‌‌‌ழ்‌ந்த நம‌க்கு இ‌ப்போதுதாவது ‌விடிவுகா‌ல‌ம் ‌பிற‌ந்ததே...?! எ‌ன்று ச‌ந்தோஷக‌த்தில் திளைத்த ம‌க்கள், அ‌திகா‌ரிக‌ள் சொ‌ன்ன ப‌திலா‌ல் ‌திகை‌த்துப் போனா‌ர்க‌ள்.

மு‌ன்பண‌ம் போ‌‌ட்டு ‌நீ‌ங்க‌ள்தா‌ன் ‌வீடு க‌ட்ட வே‌ண்டு‌ம், அ‌ந்த ‌வீடு க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்டவுட‌ன் ‌‌பில் கொடு‌த்து ‌‌‌நீ‌ங்க‌ள் செலவ‌‌ழி‌த்த பண‌த்தை பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்பதுதா‌ன். 190 ‌வீடுக‌ள் க‌ட்ட‌ப்படு‌ம் எ‌ன்று இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் த‌ற்போது 9 ‌வீடுகளே க‌ட்ட‌ப்ப‌ட்டு வரு‌கிறது. ம‌ற்றவ‌ர்க‌ள் நா‌‌ங்க‌ள் இ‌ந்த குடிசை ‌வீ‌ட்டிலேயே இரு‌ந்து ‌விடு‌கிறோ‌ம். எ‌ங்க‌ளா‌ல் மு‌ன்பண‌ம் போ‌ட்டு ‌வீடு க‌ட்டமுடியாது எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டு மறு‌த்து‌வி‌ட்டன‌ர்.

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம் எ‌ன்று பெருமையடித்துக் கொ‌ள்ளு‌ம் த‌மிழக அரசு, இலவச வீடு திட்டம் என்ற பெயரில் இப்படி வதைக்கலாமா ஏழைகளை?!

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளர்.

இதனிடையே, இந்த புகைப்படங்கள் சிறீலங்கா அரசின் மிருகத்தனமான மனித உரிமை மீறல்களை காட்டுவதாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ் ஏஜ இமானுவேல் அடிகள் தெரிவித்துள்ளார்.

Friday, October 15, 2010

ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?

இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது.
அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த செனற் தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார்.

தமிழ் ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அனைவரும் அமெரிக்க குடி மக்களாவர்.

இன்னும் இரண்டு முக்கிய தமிழர் அமைப்புக்கள் அமெரிக்காவில் இருக்கின்றன ஒன்று இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு அடுத்தது சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு இவை இரண்டும் விதம் விதமான எதிர்பார்ப்புக்களுடன் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கின.

தேர்தல் மேடை தோறும் ஒபாமா அமெரிக்க அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் குரல் கொடுத்தார் மாற்றத்தின் தன்மையை அவர் பட்டியல் இடவில்லை பதவிக்கு வந்த பின் அவருடைய அரசியல் கொள்கை வழமையான அமெரிக்கக் கொள்கையின் நீட்சியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது.

“மாற்றம்” என்றவர் ஏமாற்றி விட்டார் என்பதை அமெரிக்கா வாழ் தமிழர்கள் உணர்ந்தனர் ஏமாறச் சொன்னது நானா என்று ஒபாமா கேட்கலாம் இது அவருடைய உரிமை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடிய போரை ஒபாமா முன்னின்று நிறுத்துவார் என்பது தமிழர் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதை அண்மைக்கால வரலாறு எடுத்துச் சொல்லும் தமது இடர் துடைக்க அமெரிக்கன் வருவான் என்று முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் எதிர் பார்த்தனர் உயிர் பிரியும் வரை காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகுபோல் அமெரிக்கா விலகி நின்றதை ஈழத்தமிழர்கள் அறிவார்கள்.

தனி மனிதராக ஒபாமாவால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் அமெரிக்கத் தேசிய நலனுக்கு அடிமை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஆட்சி செய்த காலத்தில் அமெரிக்க வெளி விவகாரத் திணைக்களம் தயாரித்த இரகசியத் திட்ட வரைவு வெளியுலகிற்கு கசிய விடப்பட்டது.

இலங்கைத் தீவில் இரு அதிகார மையங்கள் இருக்க அனுமதிக்கக் கூடாது ஒன்றை இல்லா தொழிக்க வேண்டும். அந்த வேலையை அமெரிக்க நேரடியாகச் செய்யக் கூடாது. நட்பு நாடுகளை ஏவி அவர்கள் மூலம் கிளிநொச்சி அரசை அழிக்க வேண்டும்

அமெரிக்க நலனுக்குத் திருகோணமலைத் துறைமுகம் அத்தியாவசியம் அதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு விடுதலைப் புலிகள் முட்டுக் கடடையாக இருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டும்.

போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை நாலாம் ஈழப் போர் என்பன அமெரிக்காவின் வழிகாட்டலில் நடைபெற்றன பங்காளி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இன அழிப்புப் போரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இரு முக்கிய வளர்ச்சி போக்குகளை விமர்சகர்கள் அடையாளம் கண்டுள்ளனர் அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை இயன்ற மட்டும் குறைத்துக் கொள்ளுதல் பிற நாட்டு இராணுவங்களுக்குப் பயிற்சி ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அமெரிக்க நலனை முன்னெடுத்தல்.

இரண்டாவதாக ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்த கொள்கையை ஆசியா, ஆபிரிக்கா உள்ளடங்களான மூன்றாம் உலகின் பக்கம் தீவிரமாகத் திருப்ப வேண்டும் இந்து மாகடலைத் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நாடுதான் உலக வல்லரசாகத் திகழப் போகிறது.

ஈழத்தமிழ்ப் பொது மக்களுக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சியையும் செய்முறைகளையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியது அமெரிக்கா தான் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகி செத்து மடிந்த பொது மக்கள் பள்ளிச் சிறுவர்கள் நோயாளர்கள் பற்றி அமெரிக்கா கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனது கொள்கை முன்னெடுப்பிற்கு மிகவும் உகந்தவரான றொபேட் ஓ பிளேக் என்பவரைத் தனது இராஜதந்திரத் தூதுவராக சிறிலங்காவிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது சிறப்பாக செயற்பட்டதற்காக அவர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

றொபேட் ஓ பிளேக் ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு அவர் பயங்கரவாத முத்திரை குத்தினார். அமெரிக்கத் தூதுவராகப் பதவி வகித்த காலத்தில் 2008 மார்ச் 18ம் நாள் றொபேட் ஓ பிளேக் பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்களை அமெரிக்கா சார்பில் சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வழங்கினார் பயிற்சி வழங்கல் பற்றியும் அவர் பேச்சுக்கள் நடத்தினார்.

அண்மையில் தனது புதிய பதவியுடன் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்த போது சம்பந்தன் தலைமையிலான கூட்டணியினர் அவரைச் சந்தித்தனர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வின் தேவையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்குப் பதிலலித்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிலைபாட்டை வழி மொழிந்தார் அரசியல் தீர்வுக்கு இப்போது என்ன அவசரம் முதலில் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்போமே என்றார் அவர்.

போர் முடிந்த 2009ம் ஆண்டின் செப்ரெம்பர் 07ம் நாள் அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ஜோன் கெரி சிறிலங்கா தொடர்பான நீண்ட அறிக்கையை வெளியிட்டார் போருக்குப் பின்னர் சிறிலங்கா தொடர்பான அமெரிக்கக் கொள்கையை மறுசீரமைத்தல் என்பது அறிக்கைத் தலைப்பு.

மறுசீரமைப்பு என்ற பதம் தேவையற்றது ஏற்கனவே நடை முறையில் உள்ள கொள்கையைத் தான் அமெரிக்கா இயன்ற வரை முன்னெடுக்கின்றது அதில் ஈழத்தமிழரைத் தோல்வியுறச் செய்வது முதலிடம் வகிக்கிறது

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் தம்பி போல் இனி தங்கு தடையின்றி நுளைய வேண்டியது தான் பாக்கி இது அமெரிக்க நிலைப்பாடு. டியோ கார்சியா தீவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரையும் பிரிட்டிஷ் அரசின் உதவியோடு நிரந்தரமாக வெளியேற்றி விட்டு இராணுவ தளம் அமைத்த அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்களின் துயரம் பற்றிய கரிசனை ஏன் வரப் போகிறது.

சிறிலங்காவை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுபடியாகாது என்ற செய்தி கெரி அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது உறவை பலப்படுத்துவதோடு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இராஐதந்திர அனுசரனை வழங்குவது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

இது வரை இரகசியமாக நடத்தப்பட்டதை இனி பகிரங்கமாக நடத்தலாம் என்ற நிலைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது ராக் என்ற சுருக்கு பெயரால் அறியப்படும் தமிழர்களின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு மிகவும் கசப்பான பாடத்தை அண்மையில் கற்றுள்ளது அமெரிக்கா, சிறிலங்கா ஆகியவற்றின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்ச சென்ற மாதம் அமெரிக்கா வந்தார்.

இன அழிப்புக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்யும் படி ராக் அமைப்பு கேட்டதை அமெரிக்க அரசு அலட்சியம் செய்தது கொத்தபாயா அரச விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க நிதி உதவி வழங்கிய அமெரிக்கத் தமிழர்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய கோப்பை அமெரிக்க அரசிடம் கொத்தபாயா வழங்கினார் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராகி விட்ட குமரன் பத்மநாதன் என்ற கே.பி இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தார்.

ஏப்.பி.ஜ, சி.ஐ.ஏ போன்ற அமெரிக்க உளவுத்துறையினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்குவதற்கு இந்தக் கோப்பு ஆதரமாக விளங்குகிறது. செயலாளர் நாயகம் பான் கீ.மூன் சிறிலங்கா புரிந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் ஆனால் இந்தக் குழு தனது பணிகளைத் தொடங்கவே இல்லை.

சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்கா சார்பாக நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன அமெரிக்காவும் இவர்களோடு இணைந்து செயற்படும் சாத்தியம் தென்படுகிறது பான் கீ மூனின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதற்கு அவருடைய இயலாமை காரணமாகியுள்ளது அவருடைய முடிவுகள் அரசியல் முடிவுகளாக இருக்கின்றன போர் குற்றங்கள் தொடர்பான சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கிடப்பில் போடும் நோக்குடன் அமெரிக்கா செயற்படுகிறது

பான் கீ மூனின் விசாரணைக் குழு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது விசாரணைக் குழுவின் ஆரம்பமும் முடிவும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. எரியிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்பார்கள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் அல்லது சுடு போர் தொடங்கினால் ஏதேனும் இலாபம் கிடைக்குமா என்று சிலர் கணக்கிடுகின்றனர்.

தனது பொருளாதார மேம்பாட்டிற்காக அமெரிக்கா விற்பனை செய்யும் திறைசேரி கடன் பத்திரங்களைச் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. மிகக் கூடுதலாக பத்திரங்களைச் சீனா கொள்வனவு செய்துள்ளது அமெரிக்கா சீனாவின் கடனாளி நாடு சீனாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இயலாது சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாகத் தன் மீது தாக்குதல் நடத்தனால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று இந்தியக் கொள்ளை வகுப்பாளர்கள் நம்புகின்றனர் இது சாத்தியப்படுவது மிகக் கடினம்.

புதிய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன ஈழத்தமிழர் நிலை திருப்தியாகத் தற்சமயத்தில் இல்லாவிட்டாலும் சோர்வின்றிச் செயற்படுவது எம்மவர் கடனாகும். நெருக்கடி நேரத்தில் குழம்பிப் போய்நிற்கக் கூடாது ஐனநாயகவழியில் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

Wednesday, October 13, 2010

என் மனம்

நன்றி இது எனுடைய முதல் ப்ளாக் கருத்து
என் அன்பு தமிழ் சகோதரர்கலே இன்று முதல் நான் உங்களை என் சிந்தனை குள் கொண்டுவர போகிறான்

இப்படிக்கு உங்கள் ,
ராஜபாரதி